உள்ளூராட்சித் தேர்தலை பிற்போட்டது குற்றமே! அடிப்படை உரிமைகளை மீறினார் ரணில் உயர்நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பு.
உள்ளூராட்சித் தேர்தலை பிற்போட்டது குற்றமே! அடிப்படை உரிமைகளை மீறினார் ரணில் உயர்நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பு.
உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்ட விடயத்தில், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களும் அடிப்படை உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டமையால், நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுக்களின் மீதான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று வழங்கப்பட்டது.
இதன்போதே, தேர்தல் பிற்போடப்பட்டமையால் இலங்கையர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவை நடத்தப்படாமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே முடிந்தளவு விரைவாக உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் மேலும் சுட் டிக்காட்டியுள்ளது.