இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலதிகமாக வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்றுக் காலை அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்கனவே சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துவரும், அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
