இஸ்ரேல் இராணுவத்தின் எச்சரிக்கை காரணமாக காஸா நகரை விட்டு 3 இலட்சம் பலஸ் தீனர்கள் வெளியேறியுள்ளனர். இதேவேளை, மக்கள் வெளி யேறும்போது இஸ்ரேல் படை யினரால் சுட்டுக் கொல்லப்படு வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
“எங்கள் அகதி முகாம்கள் பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. பலஸ்தீன மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை.
இந்தப் பிரச்னையை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவது சட்டவிரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. காஸாவின் நிலைமை மிகவும் சோகமாக உள்ளது” என்று பலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா கவலை வெளியிட்டுள்ளார்.