இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 months ago



இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதத்தின் 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 32,097 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 9,113 பேரும், ஜேர்மனியிலிருந்து 7,609 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் 117, 141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்