பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய யாழ்.பலாலி இரு பொலிஸ் அதிகாரிகள் கைது.

1 month ago




பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் ஒளிப்படத்தை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார். ஒளிப்படத்தைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் லஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர்களான பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



அண்மைய பதிவுகள்