தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஏமாற்றம் மக்களுக்கு என பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி தெரிவிப்பு.

3 months ago


தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால், ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான்" என பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தவை வருமாறு,

"பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

"தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. என்கவுன்டர் செய்தால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என தி. மு. க அரசு நினைக்கிறது. 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம், ஆனால், ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் இருக்கும்.


மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு திருப்பி அனுப்புகிறது. மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று தொடர்ச்சியாக தி. மு. க. அரசு கோரிக்கை வைத்து வருகிறது”- என்றார்.