சம்பந்தனின் புகழுடல் விமானம் மூலம் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டது.

9 months ago


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று (04) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.