க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 114 மாணவிகள் 9ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலேயே அதிக 9ஏ சித்திகளைப் பெற்ற பாடசாலை என்ற பெருமையையும் அந்தப் கல்லூரி பெற்றுள்ளது.
இதேபோன்று, 42 மாணவிகள் 8ஏ, பெறுபேற்றையும் 32 மாணவிகள் 7ஏ பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் 260 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி அனைவரும் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.