விடுதலைப் புலிகளில் இருந்து என்னைப் பிரித்தவர் ரணில் - மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக இருந்த கருணா தெரிவிப்பு

6 months ago

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து என்னை வெளியில் அழைத்து வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான். இதன் காரணமாகத்தான் யுத்தம் முடிவடைந்தது என்று கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், 2003ஆம் ஆண்டு நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து என்னை அழைத்துச் சென்றவர்கள் அலிசாஹிர் மௌலானாவும், அன்வர் ஹாஜியாரும்தான்.

அன்வர் ஹாஜியாரின் வாகனத்தில் தான் நான் வந்தேன்.

அந்த இருவராலும் தான் நாங்கள் அன்று காப்பாற்றப்பட்டோம். இந்த உண்மை இப்போது வரை யாருக்கும் தெரியாது.

இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை அதலபாதாளத்தில் தள்ளி விட்டு சென்றார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர்தான் நாங்கள் சந்தோசமாகவும் இருக்கின்றோம் - என்றார்.