இலங்கையில் மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின் கட்டணத்தை குறைக்க முடி யாது.

4 weeks ago



இலங்கையில் மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின் கட்டணத்தை குறைக்க முடி யாது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் கோட்டாபய ராஜபக்ஷவின் கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என இலங்கை மின்சார பொதுச் சேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரம சிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மின்சார பொதுச் சேவை சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

மின்சார சபை ஊழியர்கள் எவரும் போனஸ் கொடுப்பனவை கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்று அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருந்தது.

பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாங்களும் போனஸ் கோரிப் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியின் மின்சாரத் தொழிற்சங்கம் தான் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

மின்சாரச் சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ரஞ்சன் ஜயலாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இடமளிக்காத காரணத்தால் அவர் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தற்போது குறிப்பிட்டுக் கொள்கிறார்.

ஆட்சி மாற்றம் மாத்திரமே            ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் செயற் பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கிறது.

நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின் பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது - என்றார்.