கிளிநொச்சியில் நிலவும் வெப்பம் காரணமாக பொது மக்களின் நீர்ப்பாவனை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

கிளிநொச்சியில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்களின் நீர்ப்பாவனை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனைவிட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தாக தேசிய நீர் வழங்கல் வடி காலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால் தற்காலிகமாக குறிப்பிட்ட காலம் வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்துக்கு நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவி வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் பூநகரி, பொன்னகர், பாரதிபுரம், விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நீரை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் காணப்படுவதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
