வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 3499 வர்த்தகர்களுக்கு எதிராக தண்டப் பணம் விதிப்பு

1 week ago



வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப் பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.

3445 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன் 903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

946 வர்த்தகர்களுக்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 05 இலட்சத்து 74 ஆயிரத்து 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரிசி விற்பனை தொடர்பான 774 விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் மட்டும் 126 விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.