சீரற்ற காலநிலையால் பருத்தித்துறையில் அதிக பாதிப்புக்கு உள்ளான கற்கோவளத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம் மேற்கொண்டார்
4 months ago






சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவில் அதிக பாதிப்புக்கு உள்ளான கற்கோவளம் புனிதநகர் கிராமத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று வியாழக்கிழமை முற்பகல் காலை திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார்.
கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இப் பிரிவுக்குட்பட்ட புனித நகர் கிராமம் வெள்ளத்தால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அப் பகுதிக்கு திடீர் விஜயம் மேற் கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்ய கொன்த வெள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.
இதன் போது இக்கிராமத்தில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தான் கொண்டு செல்வதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
