காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினர் இன்று பதிவுகளை மேற்கொண்டனர்.

4 months ago


பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டனர்.

குறித்த செயற்பாடானது இன்றைய தினம் (15) காலை 9.30 மணியில் இருந்து பி.ப 2.30 மணிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் 40 பேரிடம் இந்த பதிவுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இச்செயற்பாடு பல கட்டங்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய ஆணைக்குழுவின் தவிசாளர் மகேஸ் கட்டுலாந்த, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தற்பரன், காணாமல் போனோர் அலுவலகத்தின் அங்கத்தவர் யோகராசா மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.