இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிப்பு

2 months ago



இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டனர்.

77 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காகக் குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், சிறு குற்றங்களுக்காகக் கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ரங்கன பெரேரா, பிரதான சிறைச்சாலை பிரதானி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.