தமிழ் வாக்குகள் தேவைப்பட்ட ரணிலின் தோல்வி உறுதிப்படுத்தலின் விளைவு ராஜபக்சர்களின் வெற்றி என்பது தெரிந்ததே.
அதனடிப்படையில் புலிகள் அடுத்ததாகத் திட்டமிட்டது, அந்த இராணுவ வாதத்திற்கு தலைமை வழங்கக்கூடியவர்கள் என்று கணித்த பொன்சேகா, கோத்தா மீதான தாக்குதல் முயற்சி.
அந்த நடவடிக்கைகள் வென்றிருந்தால் இராணுவ முன்னெடுப்பு பிசுபிசுத்துப்போகவே வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
அதையும் தாண்டி சிங்களம் வெற்றிபெற்றிருக்குமானால் அது ஒரு இனவழிப்பாக, இரத்தக்களரியின் நடுவேயே இடம்பெறும் என்று புலிகள் கணித்தனர்.
அதற்கு சீனச்சார்பான ராஜபக்சர்கள் இருப்பதே புலிகள் அற்ற தமிழுலகில் அடுத்தகட்டத்தில் இனவிடுதலையை ஊக்குவிக்க வழிவகுக்கும் என்று புலிகள் நம்பினார்கள்.
இங்கேதான் சம்பந்தனும் சுமந்திரனும் வருகின்றார்கள். முள்ளிவாய்க்காலின் பின்பான நாட்களில் இனவழிப்பை உரத்துக்கூறவேண்டிய இவர்கள், புலிகள் பக்கம் குற்றம் இருப்பதாக அறிவித்தனர்.
2005, ஐனாதிபதி தேர்தலில் என்ன செய்யவேண்டும் என்னபதை அப்போதய தலைமையாக இருந்த விடுதலைப்புலிகள் எடுத்த முடிவைத்தான் அன்று செய்தனர்.
அதை இப்போது 20, வருடம் கடந்து ரணிலிட பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்ததாக தமிழரசு எம் பி கூறுவது எந்தளவில் உண்மை.
பயணத்துக்கு புலிகள் தடையாக இருந்ததாக புலிகள் மீது குறை கூறும் இவர் பிரதேச வாதமாக வடக்கு மக்கள் என கூறுகிறார்.
ஏன் கிழக்கு மக்கள் தடையாக இருக்கவில்லையா?
அப்படி 2005, காலத்தை இப்போது ஞாபகப்படுத்தி ரணிலிடம் நற்சான்று பெறும் சுமந்திரன் 2015, ல் நல்லாட்சியில் ரணில்தானே கூட்டமைப்பு தலைவர் சம்பந்தரையும் 15 எம்பிமாரையும் ஏமாற்றியது. இதற்கு குட்டி பிரதமராக சுமந்திரன் இருந்தவரே, இதற்கு ரணிலும் சுமந்திரனும் என்ற கூறப்போகிறார்கள்?
தமிழர்கள் முட்டாள் என்றா சுமந்திரன் நினைக்கிறார்?