வடக்கு சுகாதாரத் துறையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை இல்லை

5 months ago


வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் 2009 இற்குப் பின்னர் இடம்பெற்ற பல ஊழல், மோசடிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் விளைவே தொடர்ச்சியாக ஊழல், மோசடிகள் இடம்பெறக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மீது நீண்ட காலமாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பலவற்றுக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. பல ஊழல், மோசடிகளுக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம் என்பன கணக்காய்வுகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை உறுதி செய்து அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப புலன் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றன.

அந்த விசாரணைகளின் போதும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றப் பத்திரிகைகளும் தயாரிக்கப் பட்டிருந்தன. ஆனால் இவை எவற்றுக்கும் எந்த நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தாங்களாகவே இடமாற்றம் பெற்று வேறு திணைக்களங்களுக்கு சென் றமை,பதவி உயர்வு பெற்றுச் சென்றமை என அவர்கள் அதி லிருந்து தப்பித்துக் கொண்டனர். இந்த நிலைமையே சுகாதாரத் துறையில் தொடர்ச்சியாக ஊழல்கள் இடம்பெறுகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் கொரோனா காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் மாகாண கணக்காய்வுத் திணைக்களம். தேசிய கணக்காய்வு அலுவலகம் என பல ஆய்வு செய்து ஊழல்களை நிரூபித்திருந்தன. இதன் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசா ரணைக் குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை நிரூபித்து அதில் ஈடுபட்டவர்களான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப் பாளர், கணக்காளர் மற்றும் மூன்று உத் தியோகத்தர்கள் மீது குற்றப் பத்திரிகையும் தயாரிக்கப்பட்டு மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்நடவடிக்கைக்கு இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று சென்று விட்ட நிலையில் கணக்காளர் முல் லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுவிட்டார். அவ்வாறே ஏனைய ஊழியர்களும் இதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இதில் சம்மந்தப்பட்ட கணக்காளர் முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திலும் மோசடிகளில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.

அவ்வாறே கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதி பரின் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மாகாண மற்றும் தேசிய கணக்காய்வு அலுவல கங்கள் கணக்காய்வு ஊழல் மோசடிகளை உறுதிப்படுத்தி யிருந்தன. அந்த அறிக்கைகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியா கியிருந்தன. இருந்தும் அவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அவர் ஓய்வுப் பெற்றுச் சென்றுவிட்டார். எனவே இவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமையின் விளைவே வடக்கு சுகாதா ரத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள் இடம்பெறக் காரணம் என பல்வேறு தரப்பு களும் சுட்டிக் காட்டியுள்ளன. 

அண்மைய பதிவுகள்