இந்தியா செல்லும் ஜனாதிபதி இந்திய மீனவர்களால் எமக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பேச வேண்டும் - நற்குணம் கோரிக்கை.

3 months ago


இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் எமக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பேச வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழி லாளர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் வருகையால் வடபகுதி மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் மீனவர் சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்திய மீனவர்களின் அத்துமீறல் ஓரளவேனும்            கட்டுப்பாட்டுக்குள் கொண்டு      வரப்பட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்றுள்ள நிலையில் எமது பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமருடன் பேச்சு நடத்தி நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் - என்று கோரினார். 

அண்மைய பதிவுகள்