சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நேரில் சென்ற கனகராஜ்

6 months ago


யாழ்.சாவகச்சேரி ஆதார வைத் தியசாலையில் தமக்கான சே வைகளை பெறுவதில் இடர் பாடுகளை எதிர்நோக்குவதாக யாழ்ப்பாண அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங் கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அவதானிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக சமூக பொருளாதார சமூக உரிமைகளில் ஒன்றான சுகாதார உரிமைகளை மக்கள் அனுபவிப்பதை, அணுகுவதை உறுதி செய்யுமுகமாக இந்த களவிஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக நேற்று வெள்ளிக்கிழமை விடுதிகளில் நோயாளர்கள் எவரும் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் எம்மால் களவிஜயத்தில் பெற்றுக்கொண்ட பல அவதானிப்புகள் தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார், யாழ்ப் பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத் தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை எமது அலுவலகத்தில் மேற் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.