மீனவர் பிரச்சினை பேசுவதற்கு டக்ளஷிற்கு புதுடில்லி அழைப்

6 months ago




இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளியு றவு அமைச்சர் எஸ். ஜெயச ங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற போது மீனவர் சங்கப் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர் பாக இந்தியா போதிய கரிசனை வெளிப்படுத்துவதில்லை என்ற ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

அதுமட்டுமல்லாது அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதுகூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் கடற்றொழிலாளர் விவகாரம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந் தனர் .

இதன் போது கேள்வி எழுப்பிய மீனவ சங்கப் பிரதிநிதி, அமைச்சரே எங்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் நீங்கள் பேசினீர்களா எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், எனக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச ருக்கும் இடையிலான சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரம் விரிவாக பேசப்பட்டது.

எமது பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய மீனவர்களால் பாதிக்கப் பட்டு வருவது தொடர்பில் இந்திய தரப்புடன் பேசியுள்ளேன்.

அந்த வகையில் இலங்கை இந்தியா மீனவர் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம் பெற்ற நிலையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜெய்சங்கர் டில்லிக்கு வருமாறு அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர், பிரதேச செய லாளர்கள், மற்றும் மாகாண திணைக்களங்களின் பிரதானிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அண்மைய பதிவுகள்