16 வகை பூச்சிகளை உண்பதற்கு அனுமதியளித்தது சிங்கப்பூர் அரசு

5 months ago


பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த உணவுகள் சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளின் சர்வதேச புகழ்பெற்ற மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும் மற்றும் ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்