யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது

2 months ago


யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த அந்தச் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய      விளக்கமறிய யலில் வைக்கப்பட்டுள்ளார்.



அண்மைய பதிவுகள்