காசாவின் மத்திய பகுதியில் உள்ள பெய்ட் லகியா நகரில் இஸ்ரேலின் தாக்குதலில் 93 பேரின் நிலை தெரியவில்லை

2 months ago



காசாவின் மத்திய பகுதியில் உள்ள பெய்ட் லகியா நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல்போயுள்ளனர் என ஹமாசின் மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஐந்து மாடிக்கட்டிடமொன்றே தாக்கப்ட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தரையில் துணியால் போர்த்தப்பட்ட உடல்களின் படங்கள் சமூக        ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தனது மருத்துவமனையில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஜபாலியாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையின் இயக்குநர் குசாம் அபு சைபா தெரிவித்துள்ளார்.

போதிய மருந்துகள் இன்மையால் தனது மருத்துவமனை சிகிச்சை அளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.