மர்மக் காய்ச்சல் காரணமாக, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் நேற்று மட்டும் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

4 weeks ago



மர்மக் காய்ச்சல் காரணமாக, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் நேற்று மட்டும் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்றுகள் உலுக்கிவரும் நிலையிலேயே, நோய் அறிகுறிகளுடன் இவர்கள் அனைவரும் நேற்று சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா            மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சல் பரவுகையில், தேசிய அளவில் ஆபத்து நிறைந்த 15    மாவட்டங்களில் (முதலாம் நிலை ஆபத்து. இரண்டாம் நிலை ஆபத்து) யாழ்ப்பாணமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்