ஜனநாயகத்தை பாதுகாக்கவே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர் விளக்கியுள்ளார்.
"ஜனநாயகத்தை பாதுகாப்பது அனைத்தையும் விட முக்கி யமானது. அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அதில் தனிப்பட்ட காரணமும் அடங்கும். நான் இந்த பொறுப்பை மதிக்கிறேன். அதை விட தேசத்தை அதிகம் நேசிக்கிறேன். இதன் மூலம் ஜனநாயகக் கட்சியை ஒன்றி ணைக்க விரும்புகிறேன்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் திறன் கொண்டவர். அனுபவமும் பெற்றவர். நம்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளார். இப்போது தெரிவு அமெரிக்க மக்களிடம் உள்ளது. பொது வாழ்க்கையில் அனுபவம் கொண்டவர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதே நேரத்தில் இளம் தலைமுறையினருக்கும் இங்கு வாய்ப்பு உண்டு" என பைடன் கூறினார்.