யாழில் குடிதண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியைத் தவறுதலாக அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.

2 months ago

யாழில் குடிதண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியைத் தவறுதலாக அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் மைக்கல் (வயது-85) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த 14ஆம் திகதி தண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியை இவர் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.