யாழில் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை இழந்தவர், முறைப்பாடு வழங்கச் சென்ற பொலிஸ் நிலையங்களும் பாராமுகம்
யாழில் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை இழந்தவர், முறைப்பாடு வழங்கச் சென்ற பொலிஸ் நிலையங்களும் பாராமுகம்
2 லட்சத்து 26 ஆயிரம் ரூபா காணாமல்போயுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.காரைநகரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபா காணாமல்போயுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதுதொடர்பாக வட்டுக்கோட் டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற போது மறுநாள் வருமாறு பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
காரைநகரைச் சேர்ந்த வெதுப்பக உரிமையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்தே பணம் காணாமல் போயுள்ளது.
நேற்றுமுன்தினம் காரைநகரில் இருந்து சுழிபுரம் சந்திக்கு வேலை யொன்றுக்காக வந்திருந்தபோது. எனக்குத் தொலைபேசி அழைப் பொன்று வந்தது.
மானிப்பாய் வங்கிக் கிளையில் இருந்து பேசுகின்றோம். உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படவுள்ளது.
அதனால் தேசிய அடை யாள அட்டை இலக்கத்தைக் கூறுங்கள் என்று தொலைபேசி அழைப்பில் உரையாடியவர் கோரினார்.
அதேநேரம் காரைநகரில் உள்ள எனது மனைவியின் தொலைபேசி இலக்கத்துக்கும் அழைப்பொன்று வந்துள்ளது.
தொலைபேசி அழைப்பில் உரையாடியவர் அவரிடம் வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கேட்டதுடன், வேறு வங்கிக் கணக்குகள் இல்லையா என்றும் விசாரித்துள்ளார்.
பின்னர் என் வங்கிக் கணக்கில் இருந்து 5 தடவைகள் 40 ஆயிரம் ரூபாவும், அதன்பின்னர் 20 ஆயிரம், 6 ஆயிரம் என மொத்தமாக 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபா மீளப்பெறப்பட்டுள்ளது.
அதையடுத்து மானிப்பாயில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று முகாமையாளரிடம் இது தொடர்பாக விசாரித்த போது, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக வாருங்கள் என்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது, உங்கள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையம் சென்றபோது, மானிப்பாய் பொலிஸ் நிலையம் செல்லுமாறு கூறினார்கள்.
அங்கு சென்றபோது வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்றபோது முறைப்பாட்டைப் பதிவு செய்ய தமிழ் தெரிந்த பொலிஸார் இல்லை. நாளை வாருங்கள் என்று தெரிவித்தனர்.
பணத்தைப் பறிகொடுத்துவிட்டு முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு அலைந்து திரிய வேண்டி இருக்கின்றது என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.