அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க கனடா தீயணைப்பு படையினரும் உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

3 hours ago



அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க கனடா தீயணைப்பு படையினரும் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக 300,000 பேர் வரை அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

10,000 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத் தீ எரித்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கனேடிய அரசாங்கத்திற்கு சொந்தமான விமானம், அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தொடர்பான செய்தியை கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், கனடாவிற்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், கனேடியர்கள் அமெரிக்கர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்