வியட்நாமில் கோரத்தாண்டவமாடிய யாகி புயலால் இதுவரை 250 பேர் உயிரிழந்தனர். 125இற்கும் மேற்பட்டோரை காணவில்லை.
வியட்நாமில் கோரத்தாண்டவமாடிய யாகி புயலால் இதுவரை 250 பேர் உயிரிழந்தனர். 125இற்கும் மேற்பட் டோரை காணவில்லை. 800இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு, இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு வியட்நாமை யாகி புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியது. அப்போது கனமழை பெய்ததுடன், மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள், மரங்கள், பாலங்கள் பெயர்ந்து விழுந்தன.
பல கட்ட டங்கள், தொழிற்சாலைகள் சேதமடைந்தன. புயல் காற்றின் வேகம் மறுநாள் தணிந்தாலும் கனமழை தொடர்ந்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.பல இடங்களில் நிலச்சரிவும் ஏற் பட்டன.
இந்த நிலையில் இந்தப் பேரிடரில் இதுவரை 250 பேர் உயிரிழந்தனர், 128 பேரை காணவில்லை, 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வியட்நாமின் வி. என். எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு வியட்நாமில் தொடர்ந்து பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
வீதிகள், மின்சாரம் துண்டிப்பு, குடிநீர், உணவுப் பொருள் தட் டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் புயல், வெள்ளத்தில் விவசாயிகளும் அதிகம் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது. "சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் பயிர்கள் சேத மடைந்துள்ளன.
15 இலட்சம் கோழிகள் மற்றும் வாத்துகள் இறந்தன. மேலும் 2,500 பன்றிகள், எருமைகள் மற்றும் பசுக் கள் உயிரிழந்தன" என்று தெரி வித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு வியட்நாமை தாக்கிய மிகமோசமான புயலாக யாகி கருதப்படுகிறது.