மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த முஹமட் பஸ்லி ஸீனத் என்ற 09 வயது சிறுமி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
2 months ago
மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த முஹமட் பஸ்லி ஸீனத் என்ற 09 வயது சிறுமி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கதிரவன் இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறுமி ஸீனத் 03 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு விடை கொடுத்து உலக சாதனை படைத்தார்.
இவ்வாறு உலக சாதனை படைத்த சிறுமிக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தால் வழங்கப்பட்டன.