வர்த்தகர்களையும், பொதுமக்களை யும் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் முன்னெ டுத்து வந்த விசாரணையின் அடிப் படையில் ஐவர் கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான வன் முறை மூலம் பலரையும் மிரட்டிப் பணம் பறித்தனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2023 டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன எனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பீல் பிராந்தியத்திலும், டொரன்டோ பெரும்பாகத்திலும் இதில் பாதிக்கப் பட்டவர்கள் உள்ளடங்கியுள்ளனர் எனவும், அவர்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர் எனவும் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைதானவர்கள் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
தெற்காசிய வணிக சமூகத்தை குறிவைத்து பல பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பாக பீல் பிராந் திய பொலிஸார் கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணை செய்து வருகின்றனர்.
இப்போது அறிவிக்கப்பட்ட கைதுகள் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பமான விசாரணையுடன் தொடர்புடையனவா என்பது குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.