மட்டக்களப்பு கடற்கரையில் இரும்பிலான உருளை வடிவ தாங்கி ஒன்று கரையொதுங்கியதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
3 days ago
மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரையில் இரும்பிலான உருளை வடிவ தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் மிதந்து வந்த குறித்த உருளையை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து கரைசேர்த்தனர்.
இது ஆழ்கடலில் தரித்து நிற்கும் கம்பல்களின் உதிரிப்பாகமாகவோ அல்லது அவற்றின் ஏனைய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த வாரம் வாகரை பால்சேனை கடற்கரையில் மியன்மார் நாட்டு படகு என நம்பப்படும் மிதப்பொன்றும் கரையொதுங்கியிருந்தது.