தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
4 months ago
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக இன்று (27) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருத்தார்.
இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.