
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சில பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் ஒன்றாரியோவின் பல இடங்களில் சுமார் 60 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும், 100 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் வீடுகளிலேயே இருப்பது மிகவும் உசிதமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
