பயங்கரவாதத் தடைச் சட்ட விவகாரத்தில் அநுரகுமார திஸா நாயக்க அரசு சறுக்கத் தொடங்கி விட்டது.-- சுமந்திரன் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்ட விவகாரத்தில் அநுரகுமார திஸா நாயக்க அரசு சறுக்கத் தொடங்கி விட்டது என்று தெரிவித்திருக்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
பயங்கரவாதத் தடைச் சட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை இயக்குநர் ஜே. எம். விஜயபண்டார, அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கியஸ்தர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துகளுக்கு தமது “எக்ஸ்“ தளத்தில் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்திருக்கின்றார்.
அதிலேயே மேற்படி விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி இன்று வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை “ஒழிப் போம்" என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிக்கும் வாக்குறுதியை நீங்கள் உங்களது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் சொல்லவில்லை.
இந்தச் சட்டத்தை ஒழிப்போமென உங்களது கட்சி அறுதிபடத் தீர்மானித்த பல நிகழ்வுகளிலே நானே கலந்து கொண்டு, பேசியும் இருக்கின்றேன்.
இப்போது சறுக்கத் தொடங்கிவிட்டீர்கள்!” - என்று குறிப்பிட்டிருக்கின்றார் சுமந்திரன்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
