பிரிட்டனின் கடற்பகுதிகளில், படகுகளில் தங்க வைக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கத் தீர்மானம்.
பிரிட்டனின் கடற்பகுதிகளில், மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கத் தீர்மானம்.
பிரிட்டனுக்குள் புகலிடம் கோருபவர்களை, நாட்டுக்குள் அனுமதிக்காமல் பிரமாண்டமான கப்பல்களில் தங்கவைப்பதை புகலிடத் தடுப்புக் கொள்கையின் கீழான பிரதான திட்டமாக, முன்னைய கன்சர்வேடிவ் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், நூற்றுக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பல்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களை, பிரிட்டனுக்குள் அனுமதித்து வீடுகளில் தங்க வைக்க தற்போதை தொழிலாளர் கட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு பிரிட்டனில் உள்ள தீவிர வலதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டனின் தொழில் வாய்ப்புக்களையும், வீடுகளையும், குடியிருப்புக்களையும் குடியேற்றவாசிகள் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.