யாழ்.அல்வாய் வீரபத்திரர் கோவிலடிப் பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்கே வீழ்ந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.

4 months ago




யாழ்ப்பாணம், அல்வாய் வீரபத்திரர் கோவிலடிப் பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்கே வீழ்ந்ததால் இவ் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை இரவு வீசிய கடும் காற்று காரணமாக 751 வழித்தட பேருந்துகள் பயணம் செய்யும் வீதியிலேயே மரம் வீழ்ந்தது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்வெட்டித்துறை கெருடாவிலில் அதிகாலை யில் வீசிய கடும் காற்றால் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

இதனால், மின்சார கம்பிகள் அறுந்து தொங்கி மின்சாரம் தடைப்பட்டது.

உட னடியாக விரைந்து செயல்பட்ட மின்சார சபையினர் மின்னிணைப்பை சீர்செய்து வழமைக்கு கொண்டு வந்தனர்.

அண்மைய பதிவுகள்