






சர்வஜன பலயவின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர யாழ்ப்பாணத்திற்கு விஜயம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழில் இன்றையதினம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, சர்வஜன பலயவின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங், அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தலைவரான திலித் ஜயவீர இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
குறித்த கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது பொதுக்கூட்டம் இன்று திலித் ஜயவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
