நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலன் படுகாயமடைந்தார்

நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.
தற்போது நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார்.
அதில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலில் கட்டு போட்டுள்ளார்.
இலங்கை - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி, மாடல், விஜே மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது திறமையாலும் அழகாலும் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
