அம்பாறை பொத்துவில் அறுகம்குடாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

8 months ago


அம்பாறை, பொத்துவில் அறுகம்குடா பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இதனால் அருகம்குடா வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக மேம் படுத்தும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில் பல்வேறு தர இடத்தினைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்குடா கடற்கரைப் பிரதேசம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இந்தப் பிரதேசத்துக்கு தினமும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கானோர் தமது பொழுதைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர். 

அண்மைய பதிவுகள்