பாராளுமன்றில் வெளியிட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணை தகவல்களை அரசு வெளியிடவும்.-- எம்.பி இ.சாணக்கியன் தெரிவிப்பு

1 month ago




பாராளுமன்றில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்றுக் காலை கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களுக்கு நிகரான மதுபான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிடுமாறு அமைச்சரிடம் வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.