நீர்கொழும்பு பொலிஸ் பரிசோதகர் குளிரூட்டி ஒன்றை இலஞ்சமாக பெற்றதால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது
4 months ago

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் 2,70,000 ரூபாய் பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர் கொழும்பு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றுபவர் ஆவார்.
வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட கார் ஒன்று தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட காரை, மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்த பொலிஸ் பரிசோதகர் 2,70,000 ரூபாய் பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
