மன்னாரில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற நிகழ்வில் மக்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்தினர்.
2 months ago
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று மன்னாரில் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மக்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்தினர் என்று தெரிய வருகின்றது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று திங்கட்கிழமை பகல் மன்னாருக்கு சென்றார்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களை ஆதரித்து நடந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவே அவர் மன்னார் வந்தார்.
மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு வந்த பொதுமக்களை படைத் தரப்பினர் கடுமையாக சோதித்த பின்னரே அனுமதித்தனர்.
இதேவேளை, பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.