யாழ்.சிறுப்பிட்டியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

2 months ago




யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

இந்த இளஞர் நேற்று முன்தினம் இரவு தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளது.

வலி தாங்க முடியாமல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 35 வயதான இளைஞரே உயிரிழந்திருக்கின்றார்.

சடலம் உடல் கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம்    கையளிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 3 வாரத்துக்கு முதல் கோப்பாய் பகுதியில் குளவி கொட்டிய நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அண்மைய பதிவுகள்