ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் புதிய அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.--24 சர்வதேச ஊடக அமைப்புகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முறையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என 24 சர்வதேச ஊடக அமைப்புகள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றன.
பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுத் தலைமையில் 24 சர்வதேச ஊடக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன் வைத்திருப்பதுடன், புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளன.
ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
இலங்கையின் அரசியல் அமைப்பினாலும் ஐ.சி.சி.பி. ஆரினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கு எதிரான கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது ஆகியவை குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும், அல்லது இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
