எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் அழிப்பு. வடமராட்சி மீனவர்கள் விசனம்
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் அறுத்தெறிந்து அழிக்கப்பட்டுள்ளன. என்று வடமராட்சிப் பிரதேச மீனவர்கள் விசனம் தெரிவிப்பு.
ஆட்சிகள் மாறினாலும் இந்திய மீனவர்களது எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை தடையின்றி தொடர்ந்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் எண்ணிக்கையான இந்திய இழுவைப் படகுகள் வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் பருத்தித்துறை. வல்வெட்டித்துறை உள்ளிட்ட வடராட்சியைச் சேர்ந்த பலரது மீன்பிடி வலைகள் அறுத்து அழித்துவிட்டுச் சென்றன.
குறித்த வலைகள் மீளப் பயன்படுத்த முடியாத நிலையில் முற்றாக அழிவடைந்துள்ளன.
இதனால் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து மீன்பிடி நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில் இந்திய இழுவைப் படகுகளால் ஏற்படுத்தப்பட்டுவரும் இவ்வாறான இழப்புகள் மீளமுடியாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.