திருகோணமலையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

5 months ago


திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டாம்புளி எனும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலத்தினை, இன்று (20.07.2024) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். 

திருகோணமலை அன்பு வழிபுரத்தைச் சேர்ந்த 53 வயதான சிவலிங்கம் ஜெயசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாயி ஒருவர் தனது வயலுக்குச் சென்ற வேளையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதை அடுத்து தம்பலகாமம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த தம்பலகாமம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். 

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அண்மைய பதிவுகள்