இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
2 weeks ago
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.