யாழ்.தென்மராட்சி கலாசார மத்திய நிலையத்தின் கீழ் உள்ள கைதடி கிராமிய நிலைய கலை போட்டிகள் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகின.
யாழ்.தென்மராட்சி கலாசார மத்திய நிலையத்தின் கீழ் உள்ள கைதடி கிராமிய நிலையம், தில்லானா குழு நடனம் முதலாம் இடத்தையும் வாள் நடனம் இரண்டாம் இடத்தையும் பெற்று அனைத்து போட்டிகளும் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளன.
புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கு இடையில் நடத்தப்படும் பிரதீபா விருதுக்கான போட்டிகள் நேற்று முன்தினம் அளவெட்டி அருணோதய கல்லூரியில் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் தென்மராட்சி கலாசார மத்திய நிலைய மாணவர்கள், மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகினர்.
அந்த வகையில் கிராமிய குழுப் பாடல் போட்டியில் ஆரம்பப் பிரிவு வரணி மாணவர்கள் - முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகினர்.
அதேவேளை, மிருதங்கப் போட்டியில் வரணி மாணவன் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளார்
அத்துடன் கிராமிய குழு பாடல் போட்டியில் கனிஷ்ட பிரிவு - வரணி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்குத் தெரிவாகினர்.
இப்போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் இவற்றை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும் நிலைய பொறுப்பதிகாரியும் உத்தியோகத்தர்களும் நன்றிகளைத் தெரிவித்தனர்.