
தெற்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 14 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 3 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தும் உள்ளனர் என்று ஐ. நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ. நா. அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு சூடான் மற்றும் சூடானுக்கு உட்பட்ட அபை நிர்வாக பகுதி மற்றும் 43 பிரதேசங்களைச் சேர்ந்த 14 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஜாங்லெய் மற்றும் வடக்கு பாஹ்ர் எ கஜல் மாகாணங்கள் 51 சதவீதம் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
3 இலட்சத்து 79 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிப்பு.
இதனால் மலேரியா பாதிப்பும் அதிகரித்துள்ளது. வெள்ளத்தால், வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகளும், பயிர்களும் பாதிப்படைந்துள்ளன.
பருவநிலை மாற்றம் விளைவாக தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மோசமடைந்துள்ளது.
2021ஆம் ஆண்டில் யுனிசெப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒவ்வோர் ஆண்டும் வெள்ள பாதிப்புக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 10 இலட்சம் வரை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
